ராகுல்காந்தி மீது 10 கிரிமினல் வழக்கு! குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் அதிரடி திருப்பம்! - Seithipunal
Seithipunal



மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்யக் கோரவும் முடியாது. 

அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். செய்யவில்லை எனில் சிறைக்கு செல்வது அல்லது ஜாமீன் கோருவதே அவருக்கான வழி என்கின்றனர் சட்ட ஆலோசகர்கள்.

குஜராத் உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், சூரத் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. நியமானது என்றும், அந்த உத்தரவில் தலையிட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி மீது இதேபோல குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. 

(அதாவது ராகுல்காந்தி அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அல்லது தொடர் அவதூறு குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை உயர்நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது)

தீர்ப்பு குறித்து வழக்கை தொடர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தெரிவிக்கையில், "உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை வரவேற்கிறோம். தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி சிந்திக்க வேண்டும், 

ராகுல் காந்தி இதுபோன்ற அவதூறு பேச்சுக்களை பேசிய வரலாற்றைக் கொண்டுள்ளார் என்று நீதிமன்றத்தின் அவதானிப்பு குறித்து கேட்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை அனைவரும் ஏற்க வேண்டும். அதுதான் உண்மையான அர்த்தத்தில் சத்யமேவ ஜெயதே" என்று பூர்ணேஷ் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat HC noted 10 criminal cases pending against Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->