குஜராத்: இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி! அதிர்ச்சி காணொளி!
Gujarat Indian Coast Guard ALH Dhruv crashed in Porbandar
குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் பகுதியில் இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடலோர காவல்படையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போர்பந்தர் பகுதியில் ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஏ.எல்.ஹெச். துருவ் மாடல் ஹெலிகாப்டர் திடீரென நொறுங்கி விழுந்தது. தகவல் அறிந்த உடனே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை வெளியாகாத நிலையில், அதிகாரிகளின் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Gujarat Indian Coast Guard ALH Dhruv crashed in Porbandar