#BREAKING || டெல்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு.!! - Seithipunal
Seithipunal


வழக்கறிஞர்கள் இடையான வாக்குவாதத்தில் துப்பாக்கி சூடு.!!

டெல்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திஸ் ஹசாரி நீதிமன்ற வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஒரு தரப்பினர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக பாதுகாப்பு பணியில் இருந்த டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு டெல்லி பார் கவுன்சில் தலைவர் கே.கே.மனன் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். வழக்கறிஞர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளுக்கு உரிமம் உள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

அவர்கள் துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தாலும், எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு யாரும் நீதிமன்ற வளாகத்திற்குள் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பயன்படுத்தி இருக்க கூடாது" என கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு தொற்றுக் கொண்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gun Firing at Tis Hazari Court Complex in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->