போலீஸ் அதிகாரி செய்த பாலியல் வன்கொடுமை! மகளிர் தின நிகழ்ச்சியில் நடந்த சோகம்...!
harassment and assault by a police officer at Womens Day event
கடந்த வாரம் சனிக்கிழமை அதாவது மார்ச் 8 -ம் தேதி, சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தில் உள்ள பட்டோடாவில் உத்தவ் கட்கர் என்ற 35 வயதான போலீஸ் கான்ஸ்டபிள். அன்றைய தினம் காலை 11:30 மணியளவில் பெண் ஒருவரை மகளிர் தின நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்து,தற்காலிகக் காவல் நிலைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.
அங்கு வந்த பெண்ணைத் தனி அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைச் செய்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு பின் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கான்ஸ்டபிளை அன்றிரவே போலீசார் கைது செய்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கான்ஸ்டபிளை மார்ச் 12 வரைப் போலீஸ் காவலில் வைக்கபடுள்ளார். இதில் இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜாதவ் பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் ,'சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வன்முறைத் தொடர்பாக புகார் அளிக்க கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் பணி செய்து வந்த காவல் நிலையத்திற்குப் பாதிக்கப்பட்ட பெண் வந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு அறிமுகமாகி கான்ஸ்டபிள் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்' எனத் தெரியவந்துள்ளது .
பெண்களைக் காக்க வேண்டிய காவலரே இப்படிச் செய்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
English Summary
harassment and assault by a police officer at Womens Day event