உயிரோடு புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்! மூன்று மாதத்துக்கு பின் உடல் கண்டெடுப்பு! அதிரவைக்கும் பின்னணி!
Hariyana Murder case crime
ஹரியானா மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போன யோகா ஆசிரியர் ஒருவர் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
ஜக்தீப் (45), தனியார் கல்வி நிறுவனத்தில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
வாடகை வீட்டில் வசித்துவந்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக குடும்பத்தினர் சிவாஜி காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் திருப்பம்
போலீசார் சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்ததில் ஜக்தீப்பும் ராஜ்கரன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் என தெரியவந்தது.
முக்கிய சந்தேகநபராக ராஜ்கரன் அடையாளம் காணப்பட்டதால், அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கொலையின் காரணம்
ராஜ்கரன் தனது மனைவியும் ஜக்தீப்பும் தொடர்பில் இருந்ததாக சந்தேகித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
ஜக்தீப்பை கடத்தி, வாயில் டேப் ஒட்டிச், கை, கால்களை கட்டி, வயல் பகுதியில் புதைத்ததாக பிடிபட்டவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தற்போதைய நிலை
முக்கிய குற்றவாளி ராஜ்கரன் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
English Summary
Hariyana Murder case crime