கோவில்களில் சாதியின் அடிப்படையில் திருவிழா ஒதுக்கீடு செய்யக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
chennaihc Temple festivals
கோவில்களில் திருவிழாக்களை சாதிப் பிரிவுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்கிய உத்தரவில், நீதிமன்றம், கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என்பதைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டு முதல் புதிய முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சில கோவில்களில், திருவிழா நடத்துவதற்கான அனுமதி ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் வழங்கப்படும் நடைமுறை தற்போது நிலவுகிறது. இது சமூக ஒற்றுமையை பாதிக்கக்கூடியதாக இருக்கலாம் என்பதால், இந்த முறையை தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இந்நிலையில், கோவில் விழாக்களை அனைத்து பக்தர்களும் சமமாக கலந்துகொள்ளும் வகையில் ஒழுங்கமைக்க, இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
English Summary
chennaihc Temple festivals