பல்லாவரத்தில் பரபரப்பு; ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்..!
Traders protest against the authorities who went to remove the encroachment in Pallavaram
சென்னை பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே செட்டிக்குளம் பகுதியில் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதனை கற்ற நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், தாம்பரம் வருவாய்த்துறையினர் மற்றும் பல்லாவர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஏற்கனவே, செட்டிக்குளம் பகுதியில் 64 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு சென்ற அதிகாரிகள் அங்குள்ள கட்டிடங்களை அகற்ற முயற்சித்தனர். அப்போது அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது சர்க்கார் நிலம் கிடையாது என கூறி அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாகவும், அதற்கு தங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும்,போலீசாருக்கும் இடையில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றதால் அங்கிருந்த வியாபாரிகள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் மூன்று கடைகள் மற்றும் ஒரு வீட்டின் முகப்பு ஆகியவற்றை அதிகாரிகள் இடித்துவிட்டு அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.
English Summary
Traders protest against the authorities who went to remove the encroachment in Pallavaram