கொலை முயற்சி வழக்கு ; குற்றவாளிக்கு 07 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த வள்ளியூர் நீதிமன்றம்..!
Valliyur court sentenced the culprit in the attempt to murder case to 07 years in prison
திருநெல்வேலியில் கொலை முயற்சியில் ஈடுப்பட நபருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டு தெற்கு வள்ளியூரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வயர் திருடு போயுள்ளது. அதனை தெற்கு வள்ளியூர், வடக்கு தெருவைச் சேர்ந்த 45 வயதுடைய பாலசுப்பிரமணியன் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த 35 வயதுடைய முத்துராமன் என்பவர் அந்த வயரை திருடியதாக கூறியுள்ளார்.
இதனை அறிந்த முத்துராமன் வள்ளியூர் அம்மன் கோவில் பகுதியில் உள்ள அங்கன்வாடி அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாலசுப்பிரமணியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அவரை அவதூறாக பேசியதோடு, அரிவாளால் வெட்டி ரத்தகாயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில், பணகுடி போலீசார் முத்துராமன் மெது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து,அவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பர்சத் பேகம் தீர்ப்பு வழங்கினார். அதில் முத்துராமனுக்கு 07 ஆண்டுகள் கிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அத்துடன், இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் பணகுடி போலீசாரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் இருவரையும் நீதிபதி பாராட்டினார்.
English Summary
Valliyur court sentenced the culprit in the attempt to murder case to 07 years in prison