சட்டவிரோத பணப்பரிமாற்றம் | காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன்கள் தலைமறைவு - தேடுதல் வேட்டையில் அமலாக்கத்துறை! - Seithipunal
Seithipunal


ஹரியாணா சமல்கா தொகுதியின் எம்எல்ஏ.,வும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தரம் சிங் சோக்கரின் மகன்கள், ரூ.107 கோடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.

தரம் சிங் சோக்கரின் மகன்கள் சிக்கந்தர், விகாஸ் ஆகியோரின் கட்டுமான நிறுவனம் சார்பில் குருகிராம் பகுதியில் புதிதாக வீடுகள் கட்டித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தியுள்ளனர்.

ஆனால் ஒருவருக்கு கூட வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதனை அடுத்து எம்எல்ஏ மகான்களின் கட்டுமான நிறுவனம் வீடுகள் கட்டித் தருவதாக 1,497 பேரிடம், ரூ.360 கோடி வசூல் செய்து ஏமாற்றிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. 

மேலும், கடந்த 25-ம் தேதி எம்எல்ஏ தரம் சிங் சோக்கருக்கு சொந்தமான 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

3 நாட்கள் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் நடத்தப்பட்டது. எம்எல்ஏ மகன்களின் நிறுவனத்தில் இருந்து, தரம் சிங் சோக்கர் குடும்பத்தினரால் புதிதாக தொடங்கப்பட்ட மஹிரா இன்பராடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.107 கோடி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

தொடர்ந்து மஹிரா இன்பராடெக் நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டு, எம்எல்ஏ தரம்சிங் சோக்கருக்கு சொந்தமான சொகுசு கார்கள், ரூ.14.5 லட்சம் ரொக்க பணம், ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள நகைகளும் கைப்பற்றப்பட்டன.

தற்போது தலைமறைவான எம்எல்ஏவின் 2 மகன்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana Congress MLA sons ED Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->