#நாகாலாந்து சட்டப்பேரவைக்குள் நுழையும் முதல் பெண்.. பெருமையை தட்டிச்சென்ற ஹேக்கானி ஜக்காலு.!  - Seithipunal
Seithipunal


நாகாலாந்து மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27, 2023 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் அகுலேடா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கஜேடோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதையடுத்து, 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

நாகாலாந்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகுத்து வகிக்கிறது.

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் ஹேக்கானி ஜக்காலு மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட எல்ஜிபி வேட்பாளரை விட ஹேக்கானி ஜக்காலு 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கின்றார்.

1963ம் வருடம் முதல் நாகலாந்து மாநிலத்தில் 13 சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றி பெற்று சட்டப்பேரவையில் நுழையவில்லை. திமாபூர் -3 தொகுதியின் என்டிபிபி கட்சி வேட்பாளரான ஹேக்கானி ஜக்காலு எனும் பெண் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப்பேரவைக்கு செல்லும் பெண் என்ற பெருமையை பெறுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hekani jakhalu nagaland election first MLA women 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->