பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர் - வாக்குறுதிகளை அள்ளி வீசும் பாஜக.! - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வும், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. 

தற்போது, இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆளும் பா.ஜ.க. அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, எட்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், அரசு வேளைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும்" உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

மேலும், இந்த அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது. 

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதால் எட்டு முக்கிய அம்சங்கள் அடங்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அந்த வாக்குறுதியில், 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள், 300 யூனிட் வரை இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை அமல்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

himachal pradesh bjp Election report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->