விபத்துக்குள்ளான கார்: காணாமல் போன முன்னாள் மேயரியின் மகன்! தேடுதல் பணி தீவிரம்! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

இமாச்சலப் பிரதேசத்திற்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சுற்றுலா சென்று கொண்டிருந்தார். 

காசங் நாலா என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் வெற்றியுடன் காரில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே சட்லஜ் நதியில் கார் விழுந்த விபத்து ஏற்பட்டதில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Himachal Pradesh car accident ex mayor son disappeared


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->