காங்கிரசை பொறுத்தவரை பொய் வாக்குறுதி தான் - பிரதமர் மோடி பேச்சு.!
himachal pradesh Election campaign modi speach
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் 12 ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் காலத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மாண்டி நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- "இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இருப்பினும், இந்த முறை நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கானதாக இருக்கும்.
இதையடுத்து, பாஜக என்றால் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். இதனால், இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என்ற முடிவை அவர்கள் எடுத்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதையே அதன் வாடிக்கையாக கொண்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
himachal pradesh Election campaign modi speach