அதானியின் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேசத்தில் கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி வில்மர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை சோதனை நடத்தினர். அதானி வில்மர் நிறுவனம் ஜிஎஸ்டி வரி எய்ப்பு புகாரில் இமாச்சலப் பிரதேச மாநில அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள அதானி வில்மர் நிறுவனத்தின் குடோனில் இமாச்சல் பிரதேசம் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வழக்கமான சோதனையின் அடிப்படையில் அதானி விமர்சனத்தில் சோதனை நடந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் பர்வானுவில் உள்ள அதானி வில்மர் நிறுவனத்தின் குடோனில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் இந்த குடோனில் இருந்து தான் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்த குடோனில் உள்ள பொருட்களுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரி எழுந்ததைத் தொடர்ந்து மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அதானி நிறுவனம் வழக்கமான சோதனையின் அடிப்படையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் வந்ததாகவும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Himachal Pradesh GST officials check on Adani company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->