ஹிமாச்சல் பிரதேச தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட தடை! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக விற்கும் எதிர்காட்சியான காங்கிரஸ்க்கும் இடையே நேரடி போட்டி நிலை வருகிறது. 

இமாச்சலப் பிரதேச தேர்தல் வரலாற்றை பொறுத்த வரை ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜகவிற்கு வாய்ப்பளித்து மக்கள் வரலாற்றை மாற்றுவார்கள் என பாஜக நம்புகிறது.

அதேபோன்று பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என காங்கிரஸ் முழுமையாக நம்புகிறது. இமாச்சலப் பிரதேச தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக போட்டியிட்டுள்ளது. எனினும் ஆம் ஆத்மி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறுவது சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோன்று குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 

இதனை அடுத்து ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நவம்பர் 12ம் தேதி காலை 8 மணி முதல் டிசம்பர் ஐந்தாம் தேதி மாலை ஐந்து முப்பது மணி வரை வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Himachal Pradesh post election polls banned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->