புதுவையில் காதல் தின கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் - இந்து மக்கள்கட்சி கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாளை உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடபட உள்ளது. இந்நிலையில், புதுவை மாநிலத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்துமக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு புதுவை மாநில தலைவர் மஞ்சினி தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவெற்றபட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

புதுவை மாநிலத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியின் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் தொடர்ந்து பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் என்ற போர்வையில் புதுவை மாநிலம் முழுவதும் கலாச்சாரத்தை   சீரழித்து வரும் காதலர் தினத்தை உடனடியாக புதுவை அரசு தடை விதிக்க வேண்டும்.

இது மட்டுமின்றி  புனிதம் கெட்டுப்போகும் வகையில் புதுவையை நோக்கி வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆண்கள், பெண்கள் மது குடித்து விட்டு அரைகுறை ஆடைகளால் இந்துக்களின் மனம் புண்படும் வகையிலும் உள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு புதுவை அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu People's Party demands ban on Valentine's Day celebrations in pondicherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->