ராமர் கோவில் கும்பாபிஷேகம்; 10 மாநிலங்களில் விடுமுறை.!! அப்போ தமிழ்நாட்டில்? - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலம் அயோதியில் நாளை மறுநாள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி விரதம் இருந்து வரும் நிலையில் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். 

 

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர் அனைவருக்கும் நாளை மறுநாள் முற்பகல் அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேசம், கோவா, மத்திய பிரதேசம் அரியானா சத்தீஸ்கர் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ஒரு நாள் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று குஜராத் ஒரிசா அசாம் திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ராமர் கோயில் அபிஷேகத்திற்காக விடுமுறை அளிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Holyday for Ram temple ceremony in 10 states


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->