விடுதியில் சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பஞ்சாப், சங்குரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி விடுதி உணவகத்தில் சாப்பிட்ட 18 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விடுதி உணவு சாப்பிட்டால் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விடுதி உணவுக்கான பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த 14 மாணவர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் 4 மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் விடுதியில் உணவு தயாரிக்கப்பட்ட பொருட்களின் மாதிரியும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் ரத்த மாதிரிகளையும் ஆய்வு செய்வதாக துணையாற்றியவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் உணவு தரம் தொடர்பாக புகார் தெரிவித்திருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hostel eat18 students treated hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->