கொல்கத்தாவில் நடந்த ஹோட்டல் தீ விபத்து...! பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
Hotel fire accident Kolkata
கொல்கத்தா நகரின் மையப்பகுதியிலுள்ள ரிதுராஜ் ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்தத் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மொத்தம் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

மேலும் இந்தத் தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும்,இச்சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா தெரிவிக்கையில், 'இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும், விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது"எனத் தெரிவித்தார்.
English Summary
Hotel fire accident Kolkata