இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது.!! - Seithipunal
Seithipunal


இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் நிசர்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர் அதே பகுதியில் சொந்தமாக ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் இரண்டு இளம்பெண்கள் அங்கேயே தங்கி கணக்காளர் மற்றும் மேலாளராக பணி செய்து வருகின்றனர். 

இவர்கள் இரண்டு பேரும் ஓட்டலில் உள்ள குளியல் அறையில் தனித்தனியாக குளித்துள்ளனர். அப்போது குளியல் அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக வெளியே ஓடி வந்துள்ளார். 

அப்போது தான் வீடியோ எடுத்து ஓட்டல் உரிமையாளர் ரகுராம் என்பது தெரிய வந்தது. உடனே அந்த பெண் வீடியோவை அழிக்குமாறு கூறியுள்ளார். அப்போது ரகுராம் வீடியோவை அழிக்க வேண்டும் என்றால், தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

அதன் பின்னர் அவர் ஓட்டலில் வேலை செய்த இரண்டு பெண்களையும் மிரட்டி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்கள் இரண்டு பேரும் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுராமை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hotel owner arrested for shoot vedio on woman bathing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->