5 ஆண்டுகளில் இத்தனை குழந்தைகள் தத்தெடுப்பா?.....மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தெரிவித்துள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், நாட்டில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் கணக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 18 ஆயிரத்து 179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.

அவர்களில் சிறப்பு குழந்தைகள் எனப்படும் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் வெறும் 1,404 பேர் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 5-ந் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் 420 சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்புக்கு காத்திருப்பதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், ஆரோக்கியமான குழந்தைகளை தத்தெடுப்பதில் போட்டி நிலவுகிறது.

மேலும் 19 மாநிலங்களில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், தத்தெடுக்கப்படுவதற்கென யாருமே இல்லை என்றும், 2 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளில் 25 பேர் மட்டுமே தத்தெடுக்கப்படுவதற்கு காத்திருக்கின்றனர். சிறிதளவு குறைபாடு இருந்தாலும், சிறப்பு குழந்தைகளை தத்தெடுக்க யாரும் முன்வருவது இல்லை என்று தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How many children will be adopted in 5 years Central Adoption Resource Commission information


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->