ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரி மாற்ற சுலபமான வழி அறிமுகம்.. எப்படி தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஆதார் அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) குடும்ப தலைவர் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்ப தலைவராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த முறையில் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தாங்களாகவே மாற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆதார் அட்டையில் முகவரி மாற்றுவதற்கு குடும்ப தலைவரின் ஒப்புதல் அவசியமாகும். அதன்படி (https://myaadhaar.uidai.gov.in//) என்ற இணையதளத்தில் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

அதன்படி, மேலே கொடுக்கப்பட்ட இணையதளத்தை கிளிக் செய்து ஆதார் எண்ணை பதிவிட்டால் குடும்பத் தலைவரின் செல்போனுக்கு ரகசிய எண் (ஓடிபி) அனுப்பபடும் அதனை பதிவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

அவ்வாறு முகவரி திருத்தம் செய்யும்போது குடும்ப தலைவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள உறவுமுறைக்காண சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி குடும்ப அட்டை, திருமண சான்றிதழ், தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பதிவேற்ற செய்ய வேண்டும். ஒருவேளை சான்றிதழ்கள் எதுவும் இல்லை என்றால் குடும்பத் தலைவரின் சுய ஒப்புதல் பத்திரத்தை பூர்த்தி செய்து முகவரியில் திருத்தம் செய்யலாம்.

இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை செலுத்திய பிறகு குடும்ப தலைவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் இணையதளத்தில் குடும்பத் தலைவர் தனது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் குடும்ப தலைவரின் ஒப்புதலோடு மற்ற உறுப்பினர்கள் ஆன்லைனில் ஆதார் கார்டில் முகவரி திருத்தம் செய்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to change address in Aadhar card


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->