அசாம் : தேயிலை தோட்டத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


அசாமில் தேயிலை தோட்டத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் மாவட்டத்தின் தெற்கு ஜலன் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு போன்ற ஆயுதங்கள் கிடந்துள்ளது. இதைப்பார்த்த தோட்டத் தொழிலாளர்களால் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலையடுத்து திப்ருகார் போலீசார் மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் ஜாலான் தேயிலை தோட்டத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு பொட்டலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே துப்பாக்கியின் இரண்டு தோட்டாக்கள், இரண்டு பாட்டில் கையெறி குண்டுகள், 12 தோட்டாக்கள், மற்றும் டைமர் சாதனங்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் கைப்பாற்றப்பட்ட ஆயுதங்கள் பழையது என்றும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக திப்ருகார் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வேதாங்க் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Huge Arms Recovered From Tea Garden In Assam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->