பயன்பாடில்லாத தொட்டியில் கிடந்த எலும்பு கூடு - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் கரியாவட்டம் பகுதியில் கேரளா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒரே பொறியியல் கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தாவரவியல் பிரிவில் தண்ணீர் தொட்டி ஒன்று மாணவர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த ஆண்டு புதிய தொட்டி ஒன்று கட்டப்பட்டதால் பழைய தொட்டி பயன்பாடின்றி இருந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தக் கல்லூரி வளாகத்தில் பம்ப் ஆப்ரேட்டர் ஒருவர் நேற்று வழக்கமான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது பயன்பாடு இல்லாமல் இருந்து வரும் அந்த தொட்டியின் அருகே சென்று பார்த்தபோது, அந்தத் தொட்டியின் மூடி திறந்து கிடந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர் உள்ளே டார்ச் லைட் அடித்துப் பார்த்துள்ளார். அப்போது, எலும்புக்கூடு ஒன்று உள்ளே கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து உடனடியாக கல்லூரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தண்ணீர் தொட்டியின் உள்ளே கிடந்த எலும்புக்கூட்டை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை சோதனை செய்ததில் அந்த எலும்புக்கூடு சுமார் ஓராண்டு பழையதாக இருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் எலும்புக்கூடு கிடந்த பகுதியின் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தலச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் கண் கண்ணாடிகள், தொப்பி மற்றும் பை உள்ளிட்டவை கிடந்துள்ளது. 

அதனை பறிமுதல் செய்த போலீஸார் மாயமான மாணவர் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக அந்த தண்ணீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் இருந்ததால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

human born in college well


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->