வந்தே பாரத் ரெயில் உணவில் கிடந்த நகம்! அதிர்ச்சியில் பயணிகள்! - Seithipunal
Seithipunal


மும்பை- கோவா இடையேயான சிஎஸ்எம்டி- மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சில தினங்களுக்கு முன்பு பயணித்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் மனித விரல் நகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை வீடியோ எடுத்த பயணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது. இதனையடுத்து ரெயில்வே அளிக்கும் உணவின் தரம் குறைவாக இருப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டதாகவும் பலரும் தங்களின் மோசமான அனுபவங்களை பகிர தொடங்கினர்.

இந்நிலையில் இந்த விஷயம் இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக, ஐஆர்சிடிசி கூறுகையில், ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. புதிதாக சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகாரி ஒருவர் வந்தே பாரத் விரைவு ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஐஆர்சிடிசி ரத்னகிரியில் உள்ள சமயலறையில் முழுமையாக சோதனை நடத்தப்பட்டுத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐஆர்சிடிசி மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் பயணிகளுக்கு நல்ல உணவு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Human Fingernails in Vande Bharat Train Food Shocked Passenger


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->