காற்று மாசுபாடு: 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் சம்மன்.!
human rights commission summons officials from 4 states over air pollution
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் விதிகளை மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.
காற்று மாசை தவிர்க்க காற்று சுத்திகரிப்பு கோபுரம் என பல முயற்சிகளை அரசு செய்து வந்தபோதிலும், தற்போது காற்றின் தரம் குறியீடு "மிகவும் மோசம்" என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் தலைநகர் டெல்லி மறும் அதனை சுற்றியுள்ள என்.சி.ஆர் பகுதிகளில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாதால், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நவம்பர் 10ஆம் தேதி டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கையில் தெரிவித்ததாவது, சாதாரண குடிமக்களின் உரிமைகளை பாதிக்கும் இத்தகைய சூழ்நிலையில் மனித உரிமைகள் ஆணையம் 'ஊமைப் பார்வையாளனாக' இருக்க முடியாது.
குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாசு அளவைக் குறைக்க போதுமானதாக இல்லை, மாசு அளவை உடனடியாக குறைக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
மேலும் வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களின் செயலாளர்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
human rights commission summons officials from 4 states over air pollution