வாட்ஸ்அப் மூலம் 'முத்தலாக்' சொன்ன கணவர்!!! போலீசாரிடம் சென்ற மனைவி....
Husband gave triple talaq via WhatsApp Wife went to the police
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் காசர்கோடு மாவட்டம் நெல்லிக்கட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக். சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் இவருக்கு 26 வயது ஆகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு கல்லூராவி பகுதியை சேர்ந்த நுசைபா (21)என்ற பெண்ணுடன் திருமணமானது. இருவரும் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர். அப்துல் ரசாக் திருமணத்திற்கு பிறகு மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார்.

'முத்தலாக்':
இந்நிலையில் கடந்த மாதம் அப்துல் ரசாக் வாட்ஸாஅப் மூலமாக தனது மனைவியின் தந்தைக்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நுசைபாவை 'முத்தலாக்' செய்வதாக அவர் தெரிவித்திருந்தார். அதில் அப்துல் ரசாக் மூன்று முறை whatsappபில் குரல் பதிவை அனுப்பியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நுசைபா, கணவர் மீது காசர்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நுசைபா புகாரின் பேரில் அவரது கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முத்தலாக் தடைச்சட்டம்:
'முத்தலாக் தடைச்சட்டம் 'அமலுக்கு வந்த பிறகு ஒருவர் முத்தலாக் செய்ததாக கேரளாவில் வந்த முதல் குற்றச்சாட்டு இதுதான் என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கில் அப்துல் ரசாக்கின் தாயை இரண்டாவது குற்றவாளியாகவும், சகோதரியை மூன்றாவது குற்றவாளியாகவும் போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்த விசாரணையை போலீசார் தொடர்ந்து வருகின்றனர்.
English Summary
Husband gave triple talaq via WhatsApp Wife went to the police