மீண்டும் இந்திய ஜெர்சியில் கருண் நாயர்? – விடாமுயற்சி மற்றும் அதிரடியான Comeback-க்கு ராயுடு ஆதரவு!
Karun Nair back in the Indian jersey Rayudu backs his perseverance and impressive comeback
2016-ல் டெஸ்ட் அரங்கில் அறிமுகமானதும், சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக ட்ரிபிள் செஞ்சுரி அடித்து அசத்தியவர் தான் கருண் நாயர். ஆனால் அதற்குப் பிறகு தொடர் தோல்விகள், குறைந்த வாய்ப்புகள், தேர்வு குழுவின் மாற்றங்கள் என ஒவ்வொரு முடிவும் அவரை இந்திய அணியில் இருந்து விலக்கி வைத்துவிட்டது.
இப்போது 2024–25 சீசனில் அவர் பூரணமாக விடாமுயற்சியின் உதாரணமாக மாறியுள்ளார்.
இவை எல்லாம் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்குள் திரும்ப ஒரு வலுவான அடித்தளமாக இருந்தும், தேர்வுக் குழுவில் உள்ள தொடர்ச்சி வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள் மிகுந்திருப்பதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை என அஜித் அகர்கர் சற்று உற்சாகம் தணிக்கும் பதிலை வழங்கியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், 89 ரன்கள் (40 பந்துகளில்) – அதிலும் 12 பவுண்டரி, 5 சிக்ஸர், 222 ஸ்ட்ரைக் ரேட் – இந்த நிலையில் கூட டெல்லி தோல்வியடைந்தது என்பது வேறு விஷயம்.ஆனால் பும்ரா போன்ற பவுலர்களை திணறவைத்து, கம்பீரமாக பேட்டிங் செய்தவர் கருண் நாயர் தான்.
அம்பாத்தி ராயுடு தனது உரையில் உணர்வுபூர்வமாக கூறினார்:"இந்தியாவில் நீங்கள் ஜெர்சி தவற விட்டால் திரும்ப வாங்குவது மிக கடினம். ஆனால் கருண் நாயர் அதற்கு ஒரு மாறுபட்ட உதாரணம். அவர் மனதளவில் பல தாண்டுவங்களை கடந்து இன்று மீண்டும் நிரூபிக்கிறார்.""அவர் இன்னும் நகர்ந்து போகவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இடம் பெறவேண்டும். இங்கிலாந்துக்கு செல்லும் விமானத்தில் அவர் இருக்கவேண்டும்."
தொடர் வெற்றிகளும், பல நிலைகளில் வந்திருக்கும் அசத்தலான ஆட்டங்களும், ஒரு மிகப் பெரிய கம்பேக் கதையை உருவாக்குகின்றன. அவரின் வரலாறு விடாமுயற்சியின் முக்கிய பாடமாக மாறியுள்ளது.
English Summary
Karun Nair back in the Indian jersey Rayudu backs his perseverance and impressive comeback