'ஏப்ரல் மாதத்தில்' பட இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி மறைவு.... - Seithipunal
Seithipunal


நடிகரும், இயக்குனருமான 'எஸ்.எஸ்.ஸ்டான்லி' அவர்கள் தனது உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது திடீர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்' படத்தை இயக்கியர். இவர் அடுத்து தனுஷை வைத்து 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தையும், 'மெர்குரி', 'கிழக்கு கடற்கரை சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் , 'பெரியார்' படத்தில் அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு  ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.

அப்படிப்பட்ட எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது உடலை இறுதியாகக் காண பலர் திரண்டு வீட்டின் முன் குவிகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

April madhathil director SS Stanley passes away


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->