தேர்தல் முடியும் வரை வீட்டிற்கு வர வேண்டாம் - மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலம் பாலாகாட் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் அனுபா முஞ்சாரேவின் கணவர் கன்கர் முஞ்சாரே பாலாகாட் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். 

இந்த தொகுதியில் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முடியும் வரை வீட்டுக்கு வர வேண்டாம் என கன்கர் முஞ்சாரே தனது மனைவிக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனுபா முஞ்சாரே தெரிவித்ததாவது:- ”எங்களுக்கு திருமணமாகி 33 ஆண்டுகள் ஆகிறது. நானும் என் கணவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். 

 

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் பாலாகாட் தொகுதியில் காங்கிரஸ் சார்பிலும் என் கணவர் கோண்ட்வானா பிஎஸ்பி சார்பிலும் போட்டியிட்டோம். அப்போதுகூட நாங்கள் ஒன்றாகவே வசித்து வந்தோம். இப்போது ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. அதேநேரம் பாலாகாட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாம்ராட் சரஸ்வத்துக்கு நான் முழு ஆதரவு அளிப்பேன். ஆனால், என் கணவருக்கு எதிராக பேசமாட்டேன். பாஜக வேட்பாளரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக கன்கர் முஞ்சாரே தெரிவித்ததாவது:- “தேர்தல் நடைபெறும் நேரத்தில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இருவருவம் ஒரே வீட்டில் தங்கியிருந்தால் ‘மேட்ச் பிக்ஸிங்’ நடப்பதாக வாக்காளர்கள் நினைப்பார்கள். ஆகவே தான் என் மனைவியை தேர்தல் முடியும் வரை வெளியில் தங்கி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband order to wife not come to house till election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->