பஸ் கண்ணாடி உடைப்பு! கண்டக்டர்மீது பாம்பு வீசிய போதை மூதாட்டி கைது! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் பீர் பாட்டலால் பேருந்து கண்ணாடியை உடைத்து பெண் கண்டக்டர் மீது பாம்பு வீசிய மூதாட்டிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நல்கொண்டா வித்யா நகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக  20க்கும் மேற்பட்ட பயணிகள் காத்துக்கொண்டிருந்தனர். அந்த வழியாக அதிக பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏராளமான பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறிக் கொண்டிருந்தனர்.

இளைஞர்கள் பலரும் படிக்கட்டுகளில் தொங்கிய நிலையில் பயணம் செய்தனர். அதிக கூட்டத்தில் இருப்பதால் உடனடியாக பேருந்தை இயக்கினார் அரசு பேருந்து ஓட்டுனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவர் பேருந்து ஏறமுயற்சி செய்து முடியாததால் ஆத்திரம் அடைந்து அவர் கையில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து பேருந்து கண்ணாடியின் மீது வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடத்துனரும் ஓட்டுனரும்  அந்த மூதாட்டிடம் இது குறித்து கேட்டபோது அவர் போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து நடத்துனரும் ஓட்டுனரும் சக பயணிகளும் மூத்தாட்டியிடம் கேட்டதற்கு மூதாட்டி தனது பையில் வைத்திருந்த பாம்பை எடுத்து பெண் கண்டக்டர் மீது வீசிதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்டக்டரும் மற்ற சகப் பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் மூதாட்டியை பிடித்து அவரது பையை சோதனை செய்து பார்த்தபோது அந்த பையில் மேலும் இரண்டு பாம்புகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டியை மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hyderabad police are investigating a man who broke a bus window with a beer bottle and threw a snake at a female conductor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->