பிரதமர் மோடியிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்: இந்தோனேசிய ஜனாதிபதி பெருமிதம்! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான பணியில் இருந்து நிறைய கற்று கொண்டேன் என இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தோ கூறியுள்ளார்.

நாட்டின் 76-வது குடியரசு தின கொண்டாட்டங்களில்  கலந்து கொள்வதற்காக, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறைப்படி வரவேற்றனர்.அவருடைய முதல் இந்திய பயணம் இதுவாகும். 

இந்நிலையில், டெல்லியில் நடந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் கூட்டத்தின் முன் சுபியந்தோ பேசும்போது கூறியதாவது:, இந்தியாவிற்கு வருகை தந்ததற்காக நான் பெருமை கொள்கிறேன் என்றும்  பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான பணி ஆகியவற்றில் இருந்து நான் நிறைய கற்று கொண்டேன் என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் வறுமையை ஒழிப்பது, விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது மற்றும் சமூகத்தில் பலவீன நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது ஆகிய அவருடைய பணிகள் எங்களுக்கு உத்வேகம் ஏற்படுத்துகிறது என கூறியுள்ள இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தோஇதேபோன்று, வருகிற ஆண்டுகளில் இந்திய மக்களுக்கு வளமும், அமைதியும் மற்றும் சிறந்த விசயங்கள் வந்து சேரட்டும் என வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I learnt a lot from PM Modi: Indonesian President 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->