திரும்ப அனுப்பினால் இந்தியர்களை ஏற்றுக் கொள்வோம்..இந்தியா அறிவிப்பு!
If we send them back we will accept the Indians India Announces
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அனுப்பினால் அவர்களை ஏற்றுக் கொள்வோம் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் கடந்த 20 தேதி அதிபராக பதவியேற்றார். டிரம்ப் அதிபராக பதவியேற்றவுடன் பல்வேறு அறிவிப்புகளை வெளிவிட்டுவருகிறார்.மேலும் அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக தெரிவித்தார்.
இதையடுத்து மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக பேசிய டிரம்ப், "நாட்டிற்குள் நிகழும் அனைத்து சட்டவிரோத நுழைவுகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், தனது நிர்வாகம் மில்லியன் கணக்கான குற்றப்பின்னணி கொண்ட வெளிநாட்டினரை அவர்கள் வந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவோம் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பதில் அளித்துள்ளார்.அப்போது "சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை, அமெரிக்கா திரும்ப அனுப்பினால் அவர்களை ஏற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மளமளவென உயர்ந்துள்ளது என்றும் 2021ல் மட்டும் 27.09 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் உள்நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்பது கூடுதல் தகவல்.
English Summary
If we send them back we will accept the Indians India Announces