சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட வீட்டை வைத்திருந்தால் தாராளமாக இடித்து கொள்ளலாம் - மம்தா பானர்ஜி..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை புகுத்தி வருகின்றனர். இவரைத் தொடர்ந்து, பாஜகவினர் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் நிர்வாகிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

சமீபத்தில் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவரான அனுப்ரதா மொண்டலுக்கு 2020-ல் கால்நடை கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ அவரை கைது செய்தது. அதேபோல் அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, கொல்கத்தா ஐகோர்ட்டில் மம்தா பானர்ஜி உறவினர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்திருப்பதாகக் கூறி, உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக ஆதரவாளரும் வழக்கறிஞருமான தருண்ஜோதி திவாரி பொதுநல வழக்கை தொடர்ந்து இருக்கிறார்.

மம்தா பானர்ஜி  2011 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் முதலமைச்சரான பிறகு, அவரது உறவினர்கள், சகோதர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத்  தெரிவித்துள்ளார். மம்தாவின் சகோதர் சமிர் பானர்ஜியின் மனைவி கஜாரி பானர்ஜி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் பொதுப்பணியாளர் என்பதால் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி விளக்கமளித்த மம்தா பானர்ஜி, ஊடக செய்திகள் நான், சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட நிலத்தை வைத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. எனக்கு அதுபற்றி தெரியாது. நாங்கள் ராணி ராஷ்மோனி பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் குத்தகைக்கு எடுத்து, வீட்டில் வசித்து வருகிறோம். இன்றைய கூட்டத்தில் தலைமை செயலாளரிடம் அந்த இடம் குறித்து விசாரிக்கவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை கொண்டு இடித்து தள்ளுமாறும் உத்தரவிட்டு உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

illegally occupied house freely you removed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->