300 ரூபாய் நகையை 6 கோடி என பொய் சொல்லி விற்ற வடக்கு ஆசாமி !!
in jaipur falsely sold 300 rupees jewelery at 6 crores
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலி நகை கடையில் இருந்து வெறும் ரூ.300 மதிப்புள்ள போலி நகைகளை ரூ.6 கோடிக்கு வாங்கி செரிஷ் என்ற அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் ஏமாற்றப்பட்டார். இது குறித்து அமெரிக்க தூதரகம் இந்த சம்பவத்தில் தலையிட்டதன் பேரில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஜெய்ப்பூரில் உள்ள மானக் சௌக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜோஹ்ரி பஜாரில், அமெரிக்க சுற்றுலா பயணி செரிஷ் ஒரு நகையை வாங்கினார். இந்த நகைகள் அவருக்கு ரூ.6 கோடிக்கு விற்கப்பட்டன .
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடந்த ஒரு கண்காட்சியில் செரிஷ் அந்த நகைகளை காட்சிக்கு வைக்கப்பட்ட போது, அது போலியானது என்று தெரியவந்துள்ளது, அதைத் தொடர்ந்து செரிஷ் விற்பனையாளர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார், ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை.
ஜெய்ப்பூருக்கு வந்து கடை உரிமையாளர்களை இதைப்பற்றி கேட்ட போது, ராஜேந்திர சோனி மற்றும் அவரது மகன் கௌரவ், செரிஷ்ஷின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவரை கடையை விட்டு வெளியே அனுப்பினர்.
செரிஷ் பின்னர் மனக் சௌக் காவல் நிலையத்தில் அந்த போலி நகை கடை உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தார், பிறகு அந்த நகை கடைக்காரர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக, குற்றம் சாட்டப்பட்ட நகை கடைக்காரர்கள் செரிஷ் மீது பொய் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான செரிஷ், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உதவியை தேடி சென்றார், மேலும் தூதரகத்தின் ஈடுபாட்டுடன், ஜெய்ப்பூர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது, மேலும் நகைகள் போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.
அந்த போலி நகை கடை உரிமையாளரும் அவரது மகனும் தற்போது தலைமறைவாகியுள்ளனர், அந்த நகைகளுக்கு போலி சான்றிதழ் வழங்கிய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க ஜெய்ப்பூர் காவல்துறையின் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
“குற்றம் சாட்டப்பட்டவர் தங்கப் பாலிஷ் போட்ட வெள்ளி நகைகளை, வெளிநாட்டவருக்கு 6 கோடி ரூபாய்க்கு விற்று, போலியான நம்பகச் சான்றிதழை வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலிச் சான்றிதழை வழங்கிய நந்த் கிஷோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தலைமறைவான தந்தை மற்றும் மகனைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்று காவல் ஆணையர் பஜ்ரங் சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
English Summary
in jaipur falsely sold 300 rupees jewelery at 6 crores