ஜம்முகாஷ்மீரில் குண்டுவெடிப்பு.. 4 இராணுவ வீரர்கள் படுகாயம்..!!
in jammu kashmir grenade attack army officers injured
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தானது மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும்., ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் நீக்கம் செய்யப்பட்டு., யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.
இந்த நடவடிக்கைகளுக்கு பின்னர் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் பார்த்துக்கொள்ளும் வகையில்., அனைத்து விதத்திலும் பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டது.
இந்த தருணத்தில்., அவ்வப்போது எல்லை மீறிய துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதல் போன்றவை அரங்கேறியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்பட்ட நிலையில்., இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசும் இரகசியமாக செயல்பட்டு வந்தது.
![ind army,](https://img.seithipunal.com/large/large_ind-army-44775.jpg)
இந்தியா முழுவதும் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறையின் சார்பாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்., இந்தியா முழுவதும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவ்வப்போது உளவுத்துறை சார்பாகவும் தொடர்ந்து பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில்., ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியுள்ளது என்பதால் குறுஞ்செய்தி வசதிகள் புத்தாண்டுக்கு கிடைக்கப்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில்., ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே குண்டு வெடித்ததாகவும்., இந்த குண்டு வெடிப்பில் 4 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in jammu kashmir grenade attack army officers injured