காஷ்மீரில் திக் திக் நிமிடங்கள்...பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு, காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம்  3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்டமாக செப்டம்பர் 18-ம் தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெறுகிறது.

மேலும் 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நடப்பு சட்டசபை தேர்தலையடுத்து, அங்கு ரோந்து, வாகன சோதனை என பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் தங்தார் மற்றும் மச்சில் பகுதிகளில் நேற்றிரவு பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது  அந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவப் படை வீரர்கள் உடனடியாக  ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், வேறு பயங்கரவாதிகள் யாரும் ஊடுருவ முயன்றார்களா என்று தீவிர சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Kashmir Indian Army thwarted terrorist infiltration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->