பிபிசி அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு..!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை 60 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக இரண்டு ஆவணப் படங்களை பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போதைய இந்திய பிரதமரும் அப்போதைய குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காலை 11:30 மணியளவில் வருமானவரித்துறையினர் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். பிபிசி அலுவலகத்துக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக பிபிசி அலுவலகத்தின் பண பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை சேகரித்த வருமானவரித்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சர்வதேச வரி விதிப்பு, துணை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான விசாரணையும் நடைபெற்றது. கிட்டத்தட்ட 60 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த வருமான வரி சோதனை நேற்று இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது. இதனை பிபிசி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax department raid completed in BBC offices


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->