#BigBreaking:: டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை ரெய்டு..!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள பாரகம்பா சாலையில் பிபிசி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை 11:30 மணி முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து வெளியிட்ட ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இன்று காலை 11:30 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் டெல்லி பிபிசி தலைமை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் செல்போன்களை வருமானவரித்துறையினர் பறித்து வைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த வருமான வரித்துறை சோதனையானது எதன் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. மேலும் பிபிசி நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளிடம் வருமானவரித்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income Tax Department raid delhi BBC Office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->