பிரபல யூடியூபர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் தங்களது பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல்கள் நடத்தி வருமானம் பார்த்து வருகின்றனர். இவர்களில் பலரும் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி முதல் 2 கோடி வரை சம்பாதிக்கின்றனர். 

இப்படி யூடியூப் மூலம் சம்பாதிக்கும் இவர்கள் வருமான வரித்துறைக்கு சரியான வரி கட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரபல யூடியூபர்களின் வீடுகள் அமைந்துள்ள கேரளா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். 

இதில், பிரபல மலையாள சினிமா நடிகையான பேர்லி மாணியின் வீடு கொச்சியில் அமைந்துள்ளது. அங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்களது வீட்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax raid in Kerala youtubers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->