தேர்தல் அதிகாரியை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளர்..! வாக்குச் சாவடியில் பரபரப்பு..!
independent candidate slap election officer in vote polling
இந்தியாவில் 10 மாநிலங்களில் உள்ள 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கேரளா மாநிலத்தின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளுளில் இடைதேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
அதில், தியோலி - யூனியாரா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கஷ்தோர் சந்த் என்பவர் வேட்பாளராக நிறுத்தபட்டர்.
ஆனால் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் நாரேஷ் மீனா கட்சி முடிவை எதிர்த்து சுயேட்சையாக மனுத் தாக்கல் செய்தார். இதனால் கட்சியில் இருந்து மீனா இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரத் - ஆதிவாசி கட்சி ஆதரவுடன் சுயேட்சை கேண்டிடேட்டாக பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் சாம்ராவதாவில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த துணை நீதிபதி அமித் சவுத்ரி தனது ஆட்கள் மூன்று பேரை அழைத்து வந்து கள்ள ஒட்டு போட முயன்றதாக குற்றம் சாட்ய மீனா, அவரது கன்னத்தில் அறைந்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதைப்பார்த்த போலீசார் மீனாவை அங்கிருந்து அகலச் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
independent candidate slap election officer in vote polling