இண்டி கூட்டணியை சேர்ந்த கட்சியின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை!  - Seithipunal
Seithipunal


பிகார் மாநிலம், ஆளும் அரசின் கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள மசூதன்பூர் தியாராவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஆர்ஜேடி தலைவர் அனிருதா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

ஆர்ஜேடி தலைவர் அனிருதா சௌத்ரியை நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் பாலியா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே விரைந்துவந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முன்னதாக நேற்று கயா மாவட்டத்தில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த கொலை அரங்கேறியுள்ளது.

கடந்த 10 நாட்களில் இரண்டு தலைவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பிகாரில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDI alliance RJD Leader shoot and death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->