அருப்புக்கோட்டை பட்டாசு ஆலை விபத்து கொடூரம்: 6 பேர் பலி! தலா ரூ.4 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு!
Viruthunagar crackers factory accident cm stalin order aruppukottai
இன்று விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டு உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (வயது 56) குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 54) காமராஜ் (வயது 54) வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன்(வயது 54), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (வயது 46) செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 37) ஆகிய 6 பெரு பலியாகினர்.
இந்நிலையில், உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Viruthunagar crackers factory accident cm stalin order aruppukottai