நெல்லை தியேட்டர் வெடிகுண்டு சம்பவம் - மேலும் ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இங்குக் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பித்துச் சென்றனர். 

இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியதில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தொடர்புடையவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். மதுரையில் இருந்து அந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் நெல்லையில் முகாமிட்டு இன்று 3-வது நாளாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 நபர்களை மேலப்பாளையம் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவருக்கு இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த நபரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த நபர் அளிக்கும் தகவலின் அடிப்படையில், வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 2 பேர் யார்-யார்? என்பது தெரியவரும் என்றும், இன்றைக்குள் அவர்கள் போலீசில் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for nellai theater bomb case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->