இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்றார்.!
India new Chief election commissioner
இந்தியாவின் 25 வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று பதவியேற்றுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவி ஏற்றார். இவரது தலைமையில் மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து சுசில் சந்திராவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளநிலையில், தேர்தல் ஆணையராக இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் குமார் அவர்கள் புதிய தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்றுள்ளார்.
இவர் இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். இவரது தலைமையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
India new Chief election commissioner