"கோஹினூர் வைரம்" மற்றும் பழங்கால "கோவில் சிலைகளை" மீட்க இந்தியா திட்டம்..!
India plans to recover kohinoor diamond and idols
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அருங்காட்சியகங்களிலுள்ள 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கோவில் சிலைகள், கோஹினூர் வைரம், மகாராஜா ரஞ்சித் சிங்கின் 105 காரட் வைரம் மற்றும் சிற்பங்களை மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக டெய்லி டெலிகிராப் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெய்லி டெலிகிராப் நாளிதழிதலில் வெளியிட்ட செய்தியில், சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் கடத்தப்பட்ட தொல்பொருள் சிற்பங்கள், மற்றும் மதிப்பு மிக்க பொருள்களை மீட்க இந்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியின் முன்னுரிமை திட்டங்களில் இது ஒன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையின் பொழுது பேசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் கலை பொருட்கள் சேமிப்பவர்கள் தாமாக முன்வந்து கலைப்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
English Summary
India plans to recover kohinoor diamond and idols