உக்ரைனில் இருந்து நேபாள மாணவர்களை மீட்ட இந்தியா.. பிரதமர் மோடிக்கு நன்றி.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் சிக்கிய நேபாள மாணவர்களை மீட்க உதவியதற்காக நேபாள பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு படிக்கச் சென்ற மாணவர்களும் சிக்கித் தவித்த நிலையில் அவர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்டு ஆப்ரேஷன் கங்கா சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய அரசு மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தது.

ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியர்களை மட்டுமல்லாமல் நேபாள நாட்டு மாணவர்கள் நான்கு பேரையும் இந்திய அரசு மீட்டு அழைத்து வந்தது. இந்தியாவின் இந்த உதவிக்கு நேபாள பிரதமர் சேர் பகதூர் டியூபா இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India rescues Nepali students from Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->