காற்று மாசினால் உயிரிழப்பு.! உலக அளவில் இந்தியா முதலிடம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில் 2019 ஆம் ஆண்டு உலக அளவில் 90 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் அதிகபட்சமாக 23.5 லட்சம் உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது

அமெரிக்காவைத் தலைமை இடமாக கொண்டு இயங்கும் தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அதிகரித்துவரும் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வாகனப் போக்குவரத்தினால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலகளவில் வீடு மற்றும் காற்று சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் 66.7 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவில் மட்டும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாட்டினால் 9.8 லட்சம் பேர் மற்றும் வீடுகளினால் ஏற்படும் மாசுகுறைபாட்டின் காரணமாக 6.1 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்தியாவில் நிலக்கரி மற்றும் பயிர்க் கழிவுகளை எரிப்பதும், வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் உயிரி கழிவுகள் மற்றும் விறகுகள் எரிக்கப்படுவதும் காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து உலகளவில் நீர் நிலை மாசுபாட்டினால் 13.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக காற்று தர மேலாண்மை வாரியம் அமைத்தும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் உட்பட, சுற்றுச்சூழல் மற்றும் வீட்டுக் காற்று மாசுபாட்டிற்கு எதிராக இந்தியாவின் கணிசமான முயற்சிகள் இருந்தபோதிலும், இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India topped in air pollution death toll


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->