283 இந்தியர்கள் மீட்பு!!! மியான்மர் எல்லையில் இருந்து இந்திய விமானப்படை மூலம்....! - Seithipunal
Seithipunal


வெளிநாடு செல்வோர் தகவல்களை சரிவர விசாரிக்காமல், வெளிநாட்டில் வேலை மற்றும் அதிகச் சம்பளம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி, குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். இதுபோல பலர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் குண்டர்களிடம் சிக்கியுள்ளனர்.

அங்கு தவிப்பவர்களை அவ்வப்போது மத்திய அரசு மீட்டு வருகிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாகக் கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளில் இருந்து இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து- மியான்மர்:

இதற்கிடையே, தாய்லாந்து- மியான்மர் எல்லையில் 2 வாரங்களாகச் சிக்கித் தவித்த இந்தியர்கள் 283 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று சைபர் கிரைம் மோசடி குற்றத்தில் மர்ம கும்பல் ஈடுபட செய்துள்ளது.இதுத்தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது,"மியான்மரில் போலி வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 283 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இருக்கிறது. அவர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்" எனப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Air Force from Myanmar border 283 Indians rescued


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->