இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி நாளை ஸ்ரீநகர் விஜயம்..!
Indian Army Chief Upendra Dwivedi will visit Srinagar tomorrow
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதி தீவிரவாதிகள் தாக்குதல் தடத்தியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி நாளை ஸ்ரீநகர் செல்லவுள்ளார்.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்து டெல்லி திரும்பியுள்ளார். அத்துடன் அவர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அத்துடன், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், ராணுவ தளபதி விக்ரம் மிஸ்ரி நாளை ஸ்ரீநகர் சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்யவுள்ளார். அவரிடம் அங்குள்ள ராணுவ உயர் அதிகாரிகள், காஷ்மீரிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
இந்த கூட்டத்தில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் கமாண்டர்கள் உள்ளிட்ட ராணுவத்தில் உள்ள பல பிரிவுகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian Army Chief Upendra Dwivedi will visit Srinagar tomorrow